சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ரயில் நிலையங்களில் தேசியக்கொடி: பயணிகளிடையே தேசப்பற்றை ஊக்குவிக்கும் ரயில்வே!

பயணிகளிடையே நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் வகையிலும், அழகுபடுத்தும் நோக்கிலும், ரயில் நிலையங்களில் தேசியக்கொடியை அமைக்க  வடகிழக்கு மண்டல ரயில்வே முடிவு செய்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:00 am

Muthumari

பயணிகளிடையே நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் வகையிலும், அழகுபடுத்தும் நோக்கிலும், ரயில் நிலையங்களில் தேசியக்கொடியை அமைக்க  வடகிழக்கு மண்டல ரயில்வே முடிவு செய்துள்ளது.

நாட்டில் உள்ள 17 ரயில்வே மண்டலங்களில் ஒன்றான வடகிழக்கு மண்டல ரயில்வே, பயணிகளிடையே தேசப்பற்றை ஊக்குவிக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் தேசியக்கொடியை அமைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, இரண்டு ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மற்ற ரயில் நிலையங்களிலும் இது கொண்டு வரப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வடகிழக்கு மண்டல ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, 100 அடி உயரத்தில் எங்களது மண்டலத்திற்கு கீழ் வரும் அனைத்து ரயில் ரயில் நிலையங்களிலும் தேசியக்கொடியை அமைக்க முடிவு செய்துள்ளோம். முதலில் தலைநகரின் ரயில் நிலையங்கள், மாவட்ட தலைநகரங்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் அமைக்கப்படும்.

அதன்பின்னர் படிப்படியாக மற்ற ரயில் நிலையங்களிலும் இது கொண்டு வரப்படும். தற்போது அசாம் மாநிலத்தில் கவுகாத்தியிலும், மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பாய்குரி ஆகிய இரண்டு இடங்களில் தேசியக்கொடி அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக ரயில் நிலையங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பயணிகளிடையே தேசப்பற்று வளரும்' என்று தெரிவித்துள்ளார். 

பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம் உள்ளிட்ட 8 வடகிழக்கு மாநிலங்களில் ரயில் பாதைகளை நீட்டிக்கும் முயற்சியிலும் மண்டல ரயில்வே இறங்கியுள்ளது. 

2020ம் ஆண்டு மணிப்பூரின் தலைநகரான இம்பால், மிசோரத்தின் தலைநகரான  அய்ஸ்வால் மற்றும் நாகாலாந்தின் கோஹிமா ஆகிய நகரங்களில் ரயில் பாதைகள் நீட்டிக்கப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.