உன்னாவ்: உன்னாவ் பலாத்கார சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ குல்தீப் செங்கா் வீட்டுக்கு மாநில சபாநாயகர் சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பதின்ம வயதுப் பெண் ஒருவா் அளித்த பாலியல் புகாரின்பேரில், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கா் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.அதேசமயம் அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்காக, ரேபரேலி மாவட்டத்தில் அந்தப் பெண் தனது வழக்குரைஞா், உறவினா்களுடன் காரில் சென்றபோது அவா்கள் மீது லாரி ஒன்று கடந்த ஜூலை 28-ஆம் தேதி மோதியது. இந்த விபத்தில் அந்தப் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் பலத்த காயமடைந்தனா். உடன் வந்த உறவினா் இருவா் உயிரிழந்தனா்.
இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியதால், இதுகுறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, குல்தீப் சிங் செங்கா் உள்ளிட்டோா் மீது கொலை, கொலை முயற்சி, குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் எம்.எல்.ஏ குல்தீப் செங்கா் வீட்டுக்கு மாநில சபாநாயகர் சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குல்தீப் செங்கரின் சகோதரர் மனோஜ் செங்கர் உடல்நலக்குறைவால் ஞாயிறன்று காலமானார். அவரது உடல் அடக்கம் திங்கள் காலை சொந்த கிராமமான மகியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக குல்தீப் செங்கருக்கு 72 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
குல்தீப் செங்கருக்கு நெருக்கமானவரும் , உ.பி மாநில சட்டப்பேரவை சபாநாயகருமான ஹ்ருதய் நரைன் தீக்ஷித் இறந்து போன மனோஜ் செங்கருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அந்த வீட்டிற்கு திங்கள் காலை சென்றிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


