சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சிக்கிம் இடைத்தேர்தல்: முதல்வர் வெற்றி; இரண்டு தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக!

ஹரியாணா, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலுடன் சிக்கிம் மாநிலத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:30 am

Muthumari

ஹரியாணா, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலுடன் சிக்கிம் மாநிலத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த மூன்று தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கையில் பாஜக இரண்டு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

போக்லாக்- கம்ராங் தொகுதியில் சிக்கிம் முதல்வரும், சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சியின் வேட்பாளருமான பிரேம் சிங் தமாங் வெற்றி பெற்றுள்ளார். இவர் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி வேட்பாளர் மோசஸ் ராயை விட 8,953 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

மார்டம்- ரும்டெக் தொகுதியில் பாஜக வேட்பாளர் சோனம் ஷ் வென்சுங்பா  6,150 வாக்குகள் வித்தியாசத்திலும், கேங்டாக் தொகுதியில் பாஜக வேட்பாளர் யங் ஷேரிங் லெப்ச்சா 1,010 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். 

மொத்தமுள்ள 3 தொகுதியில் பாஜக 2 தொகுதியையும், சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.