புபனேஸ்வர்: அயோத்தி வழக்கின் தீர்ப்பு ஹிந்துக்களுக்கு சாதகமாகதான் வரும் என்று எதிர்பார்ப்பதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முதன்மைச் செயலர் சுரேஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய செயலர்களுக்கான மூன்று நாள் மாநாடு ஒதிஷா மாநிலத் தலைநகர் புபனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் இதில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முதன்மைச் செயலர் சுரேஷ் ஜோஷி பேசியதாவது:
அயோத்தி வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. நாங்கள் அதன் தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம். அநேகமாக அயோத்தி வழக்கின் தீர்ப்பு ஹிந்துக்களுக்கு சாதகமாகதான் வரும். நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் உருவாகும் சூழ்நிலையை பொறுத்து, அடுத்து என்ன செய்வதென்று ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்யும்.
அசாமைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுத் திட்டம் செயல்படுத்தப்ப்பட வேண்டும். இந்த திட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை. நாட்டின் நலனுக்கானது.
நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது என்பதால் பொது சிவில் சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


