சத்னா: மத்திய பிரதேசத்தில் ஒரே நபரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட விநோதம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களில் 'கர்வா சவுத்' எனப்படும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். பொதுவாக கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு நான்கு நாட்கள் கழித்து கடைபிடிக்கப்படும் இந்த பண்டிகையின் போது, பெண்கள் தங்களது கணவனின் நல்வாழ்விற்காக நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் தங்களது கையில் உள்ள சல்லடை வழியாக நிலவைக் கண்டவுடன்தான் தங்களது விரதத்தை முடித்துக் கொள்வர்.
தற்போது மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் மூன்று பெண்கள் சல்லடை வழியாக தங்களது ஒரே கணவரைக் காணும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இதுதொடர்பாக கிடைத்துள்ள தகவல்களின்படி சத்னா மாவட்டத்தில் உள்ள சித்ரகூட் பகுதியின் லோத்வாரா என்னுமிடத்தில் காசிராம் காலனி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் கிருஷ்ணா என்பவர் ஷோபா, ரீனா மற்றும் பிங்கி என்னும் மூன்று சகோதரிகளை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்றாகவே வசித்து வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு ழநதைகள் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது .
சகோதரிகள் மூவரும் 'கர்வா சவுத்' விரதத்தைக் கடைபிடிக்கும் புகைப்படம்தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


