ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகு போல் கிழித்து சிதைக்கிறார்கள்: சீறிய சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகு போல் கிழித்து சிதைக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

News image

சிவராஜ் சிங் சவுகான்

Updated On :16 அக்டோபர் 2019, 12:33 pm

இந்தூர்: மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகு போல் கிழித்து சிதைக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது  இந்த அரசில் ஊழல்கள் அதிகரித்துள்ளதாக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வரான சிவராஜ் சிங்  சவுகான் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகு போல் கிழித்து சிதைக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்தூரில் புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

அரசுத்துறைகளில் இடமாற்றங்கள் மற்றும் பதவிகளுக்கு ஒரு அமைச்சர் ஒரு விலை  சொல்கிறார். மற்றொரு அமைச்சர் மற்றொரு விலை சொல்கிறார். மத்திய பிரதேச வரலாற்றிலேயே  மிகவும் ஊழல் நிறைந்த அரசு இதுதான். இந்த அரசின் அமைச்சர்கள் மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகு போல் கிழித்து சிதைக்கிறார்கள்.

வரும் 18-ஆம் தேதி இங்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ள நிலையில் நான் அரசை விமர்சிக்க விரும்பவில்லை. எனக்கு  மாநிலத்தின் மேல் அக்கறை உள்ளது. இங்கு முதலீடு செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்குமாறு நான் தொழிலதிபர்களை கேட்டுக் கொள்கிறேன்.

சமீபத்திய மழையின் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் இதுவரை அதுகுறித்த கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை. எனவே உடனடியாக நிவாரணங்கள் வழங்குவது குறித்த கேள்வியே எழவில்லை. இந்த அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை என்றால், நான் ஒரு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.