கொச்சி: வீட்டில் யானைத்தந்தம் வைத்திருந்த வழக்கு தொடர்பாக நடிகர் மோகன்லாலுக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல மலையாள நடிகரான மோகன்லாலின் கொச்சி வீட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது வீட்டில் அவர் யானைத்தந்தங்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறை மற்றும் வன உயிரினச் சட்டப்படி இது குற்றம் என்பதால், கேரள வனத்துறை இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டது.
இதைத்தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த மாதம் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் மோகன்லால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம் மோகன்லால் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் யானைத்தந்தங்களை வைத்திருக்க வனத்துறை தனக்கு ஏற்கனவே உரிமைச் சான்றிதழ் அளித்துள்ளதால் இந்த வழக்கு அடிப்படையற்றது என்றும், தான் ஒரு பிரபல நடிகர் என்பதால் விளமபரங்கள் தேட இத்தகைய வழக்குகள் தொடுக்கப்படுவதாகவும் தெரிவிகித்திருந்தார்.
இந்நிலையில் மோகனலாலுக்கு அளிக்கப்பட்ட உரிமைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி ஒருவர் வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தபோது, மோகன்லாலுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கினை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


