ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பொருளாதாரத்தில் மன்மோகனை பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்: பாஜகவை போட்டுத் தாக்கிய நிர்மலா சீதாராமனின் கணவர்! 

பொருளாதாரத்தில் மன்மோகனை பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரின் கருத்தால், பாஜகவுக்கு பெரிய தர்ம சங்கடம் உருவாகியுள்ளது.

News image

பரக்கல பிரபாகர்

Updated On :14 அக்டோபர் 2019, 12:13 pm

புது தில்லி: பொருளாதாரத்தில் மன்மோகனை பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரின் கருத்தால், பாஜகவுக்கு பெரிய தர்ம சங்கடம் உருவாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரக்கல பிரபாகர். இவர் நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றுதான் பாஜக அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை உருவாகியுள்ளது. அவர் தனது கட்டுரையில், 'பாஜகவால் சொந்தமாக எந்த ஒரு பொருளாதார கட்டமைப்பையும் உருவாக்க இயலாது. நரேந்திர மோடி அரசானது தங்களது முன்னோடிகளாகிய  முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ் மற்றும் மன்ன்மோகன் சிங் ஆகியோரின் பொருளாதார மாதிரிகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக அரசானது பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்த மட்டில் 'அது சரி இல்லை, இது சரி இலலை' என்று மற்றவர்களைக் கூறி வருகிறதே தவிர, தனது சுயமான பொருளாதாரக் கொள்கை எதுவென்பதை உணரவில்லை' என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்னும் ஒருவாரத்தில் ஹரியாணா மற்றும் மஹாராஷ்டிர மாநில தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சரின் கணவரின் இந்த விமர்சனமானது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி இதனை வெகுவாக வரவேற்றுப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.