நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கட்டண உயர்வு எதிரொலி: மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட ஜவஹர்லால் நேரு பல்கலை. மாணவர்கள்!

கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், இன்று மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:18 pm

Muthumari

கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், இன்று மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில தினங்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தில்லி பல்கலைக்கழகப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

Story image

கடந்த 18ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய அன்று, நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனர். இதனால் காவல்துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி வரும் அவர்கள், இன்று தலைநகர் தில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 

ஏற்கனவே, மாணவர்கள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு, உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளது. யுஜிசி முன்னாள் தலைவர் வி.எஸ்.சவுகான், ஏ.ஐ.சி.டி.யு தலைவர் சகாஸ்ரபுத்தே, யுஜிசி செயலாளர் ரஜினிஸ் ஜெயின் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். இருந்த போதிலும், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பல்கலை.க்கு வருவதை எதிர்த்தும் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.