சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

உ.பியில் விவசாயிகள் 300 பேர் மீது வழக்குப்பதிவு! என்ன காரணம்?

உத்தரப் பிரதேசத்தில் வயல்களில் உள்ள எஞ்சிய பயிர்களை எரித்தற்காக விவசாயிகள் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:36 am

Muthumari

உத்தரப் பிரதேசத்தில் வயல்களில் உள்ள எஞ்சிய பயிர்களை எரித்தற்காக விவசாயிகள் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது வயல்களில் உள்ள எஞ்சிய பயிர்கள், சுள்ளிக் கட்டைகளை எரித்துள்ளனர். இவ்வாறு எரிப்பதால் காற்று மாசுபடுகிறது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதற்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது. தடையை மீறி பயிர்களை எரித்ததால் விவசாயிகள் 300 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  பில்சாண்டா, நெரியா, அமரியா, புரான்பூர், செராமாவ், மாதோதண்டா, ஜஹானாபாத், பிசல்பூர் மற்றும் கஜ்ராலா உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் மீது வருவாய் அதிகாரிகள் இந்த வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.  

இதனால் கோபமடைந்த விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஏற்கனவே கரும்பு நிலுவைத் தொகை செலுத்தாதது, நெல் விலை குறைவாக இருப்பது, உரங்களின் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது பயிர்களை எரித்ததற்காக வழக்குப்பதிவு செய்து விவசாயிகளை அரசு மேலும் துன்புறுத்துவதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

ஏற்கனவே, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் வயல்வெளிகளில் உள்ள தேவையில்லாத பயிர்களை விவசாயிகள் எரிப்பதால் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.