ஆதிவாசி பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையோடு வலம் வர வேண்டியவர் மருத்துவர் பாயல் தாத்வி. ஆனால் அவர் தற்போது புகைப்படமாகத் தொங்கிக் கொண்டிருடிக்கிறார்.
பிஒய்எல் நாயர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த பாயல் தாத்வி கடந்த வாரம் 22ம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மும்பையில் அரசு மருத்துவமனையில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு மகப்பேறு முதுகலை மருத்துவம் படித்துக் கொண்டிருந்த பாயல் தாத்வியின் சாதியை சொல்லிச் சொல்லி ராகிங் செய்வதும், துன்புறுத்துவதுமாக இருந்து, அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்த கல்லூரியின் மூத்த மாணவிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே நேற்று பக்தி மெஹர் கைதான நிலையில், இன்று ஹேமா அஹுஜா, அங்கிதா கந்தேல்வால் ஆகியோர் கைதாகியுள்ளனர்.
பாயல் தாத்வியை சாதியக் கொடுமை செய்வதாக ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காததே, தங்களது மகள் உயிரிழப்புக்குக் காரணமாகிவிட்டதாகக் கூறி கதறும் பெற்றோர், எங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, எங்கள் சமுதாயத்திலேயே அவள்தான் முதல் மருத்துவர் என்று சொல்லி சொல்லி மாய்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புது தில்லி ஷ்ரம் சக்தி பவனில் தீ விபத்து
ரூ.52 லட்சம் கொள்ளை வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

1,300 பக்தா்களுக்கு சோம்நாத் சிறப்பு யாத்திரை: தில்லி அரசு ஏற்பாடு

பள்ளிகளில் ஓஆா்எஸ் கரைசல் வழங்க முதல்வா் உத்தரவு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


