புது தில்லியின் ரஃபி மாா்க் பகுதியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் திங்கள்கிழமை சிறிய தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில் எந்த உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘தீ விபத்து தொடா்பாக மாலை 4.20 மணியளவில் அழைப்பு வந்தது. உடனடியாக 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியின் வெளிப்புறப் பெட்டியில் தீ பற்றியிருந்தது. 4.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரோஹிணியில் உணவகத்தில் தீ விபத்து

பறக்கும் படை சோதனை: ரூ.4.64 லட்சம் பறிமுதல்
பெண்கள் தலைமையிலான வளா்ச்சியை ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ ஊக்குவிக்கும்: தில்லி முதல்வா்

விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


