சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

புவனேஸ்வர் ரயில்வே மருத்துவமனையில் இன்று பிறந்த பெண் குழந்தைக்கு ஃபானி என பெயர் சூட்டல்

ஒடிஸா மாநிலம் புரி அருகே இன்று கரையைக் கடந்த ஃபானி புயலால் பாதிப்புகள் ஏராளம். அதற்கிடையே ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் இங்கே பார்க்கலாம்.

News image
Updated On :3 மே 2019, 9:25 am


புவனேஸ்வர்: ஒடிஸா மாநிலம் புரி அருகே இன்று கரையைக் கடந்த ஃபானி புயலால் பாதிப்புகள் ஏராளம். அதற்கிடையே ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் இங்கே பார்க்கலாம்.

ஒடிஸா மாநிலமே இன்று ஃபானி புயலால் செய்வதறியாது ஸ்தம்பித்துப் போயுள்ளது. காலை 8 மணிக்கு  கரையைக் கடக்கத் தொடங்கிய ஃபானி புயல் 11 மணிக்குக் கரையைக் கடந்தது.

Story image

இந்த நிலையில், இன்று புவனேஸ்வரில் உள்ள ரயில்வே மருத்துவனையில் கர்பிணிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ஃபானி என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரயில்வே பெட்டிகள் பராமரிப்புத் தொழிற்சாலையில் ஊழியராக இருக்கும் 32 வயது பெண்ணுக்கு இன்று காலை 11.03 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஃபானி புயல் சின்னம் கரையைக் கடந்த போது இந்த குழந்தை பிறந்ததால், அதன் நினைவாக இக்குழந்தைக்கு ஃபானி என்று பெயர் சூட்டப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.