ராய்ப்பூர்: பெயரில் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பியவர் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நாடகங்களுக்குச் சொந்தக்காரரான பெயர் பெற்ற வில்லியம் ஷேக்ஸ்பியர்.
ரோஜா மலரை வேறு எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது சுகந்தமான நறுமணத்தையே அளிக்கும் என்று அவர் கூறியது எந்த அளவுக்கு உண்மையல்லவா?
சரி பெயரைப் பற்றி ஏன் இந்த அளவுக்கு மொக்கைப் போடுகிறீர்கள், உங்கள் மொக்கைக்கு ஏன் ஷேக்ஸ்பியரை எல்லாம் உதவிக்கு அழைக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்பது இங்கே நன்றாகவே தெரிகிறது. காரணம் நீங்கள் மைன்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாகவே சொல்லி விட்டீர்கள்..
முறைக்காதீர்கள்.. நேரடியாகவே விஷயத்துக்கு வந்துவிடுகிறோம்.. நமக்குள் சண்டை வேண்டாம்.
நீங்கள் நம்பினால் நம்புங்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 3 வாக்காளர்களின் பெயர்கள் நரேந்திர மோடி என்று பதிவாகியுள்ளது. பிலாஸ்புர், துர்க் நகர், சக்தி ஆகிய மூன்று பகுதிகளில் நரேந்திர மோடி என்ற பெயரில் 3 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இது மட்டுமா, அதே பகுதியில் அரை டஜன் ராகுல் காந்திக்கள் வாக்காளர்களாக உள்ளனர். இவர்களை எல்லாம் விஞ்சும் வகையில் சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகெல் பெயரைக் கொண்ட 19 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான். இவர்களில் பெரும்பாலானோர் மேற்கண்ட அதே பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான்.
அந்த 19 பேரில் ஒருவரான புபேஷ் பாகெல், என் பெயரை யாரிடமாவது சொன்னால் அவர்கள் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். மாநிலத்தின் முதல்வரை பெயரை வைத்திருப்பதால் என்கிறார்.
சத்தீஷ்கர் மாநிலம் படன் தொகுதியில் முதல்வர் புபேஷ் பாகல் பெயர் வாக்காளர் பதிவேட்டில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
யார் கண்டது மோடி, ராகுல் என இவர்கள் எல்லாம் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்களாகக் கூட இருக்கலாம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


