/

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒன்று மட்டும் நடக்கவில்லை: ஆதித்யநாத் பெருமிதம்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு சிறிய போராட்டம் கூட நடக்கவில்லை என்று மாநில முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 மார்ச் 2019, 7:24 am


லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு சிறிய போராட்டம் கூட நடக்கவில்லை என்று மாநில முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் மாநில அரசு குற்றம் மற்றும் குற்றவாளிகளை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ளாமல் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் ஆதித்யநாத் கூறினார்.

தனது ஆட்சிக் காலத்தின் ரிப்போர்ட் கார்டை வெளியிட்டுப் பேசிய ஆதித்யநாத், உத்தரப்பிரதேசம்தான் மாநிலத்தின் ஒட்டுமொத்த அமைதிக்கும் ஒரு உதாரணமாக விளங்குகிறது.

மாநிலத்தின் மீதான மக்களின் அபிப்ராயத்தையே பாஜக தலைமையிலான ஆட்சி மாற்றிவிட்டது என்றும் ஆதித்யநாத் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.