/

அயோத்தி பிரச்னையை மத்தியஸ்தம் மூலம் தீர்க்க முடியாது: சிவசேனை

ராம ஜென்ம பூமி என்பது உணர்வுப் பூர்வமான விஷயம், இதனை மத்தியஸ்தம் செய்து தீர்க்க முடியாது என்று சிவ சேனை கருத்துத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2019, 12:46 pm


மும்பை: ராம ஜென்ம பூமி என்பது உணர்வுப் பூர்வமான விஷயம், இதனை மத்தியஸ்தம் செய்து தீர்க்க முடியாது என்று சிவ சேனை கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், உச்ச நீதிமன்றமும் கூட தீர்க்க முடியாத இந்த பிரச்னையில், வெறும் 3 மத்தியஸ்தர்கள் எப்படி தீர்த்துவிடுவார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போராடி வருபவர்கள் மத்தியஸ்தத்தை விரும்பாத போது அதனை ஏன் உச்ச நீதிமன்றம் தேர்வு செய்துள்ளது. இதனைத் தீர்க்க அரசாணை மட்டுமே உதவும் என்றும் கட்சி சார்பில் கருத்துக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.