ராணுவ வீரர்களின் சடலத்தை வைத்து சந்தர்ப்பவாத அரசியல் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹவுரா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,
"கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் எதுவும் செய்யாததால், உங்களுக்கு குண்டுகளையும், ராணுவ வீரர்களின் சடலங்களையும் காண்பிக்க வேண்டியுள்ளது. ராணுவ வீரர்களின் சடலங்களை வைத்து சந்தர்ப்பவாத அரசியலை செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நாட்டுக்காக நாங்கள் அனைவரும் ராணுவத்துடன் துணை நிற்போம். ஆனால், மோடியின் ஆட்சிக்காக துணை நிற்கமாட்டோம்.
பாலாக்கோட்டில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினால், கேள்வி எழுப்புபவர்கள் பாகிஸ்தானியர்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.
நாம் அனைவரும் அண்டை நாட்டை சேர்ந்தவர்கள், மோடி மட்டும் தான் இந்தியர்.
தேசப்பற்று குறித்து பாடம் கற்றுத் தருவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும். தேசப்பற்றை நாம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளத் தேவையில்லை. நாம் நாட்டுக்காக இருக்கிறோம். மத்தியில் தவறிழைத்த மோடியின் ஆட்சிக்காக அல்ல. மோடி மற்றும் அமித்ஷாவின் அடையாளத்தை நாட்டில் இருந்து அகற்றுவோம். ஒன்று இந்த நாடு தப்பிக்கும் இல்லையெனில் அவர்கள் ஜெயித்துவிடுவார்கள். இந்த அரசை எவ்வளவு விரைவில் வீழ்த்துகிறோமோ நாட்டுக்கு அவ்வளவு நல்லது.
எனது மதம் குறித்து பாஜகவினர் வலைதளங்களில் தினமும் தேடி வருகின்றனர். எனது மதம் மனிதநேயம் என்பதை நான் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவினர் கையில் ரத்தக்கறை உள்ளது. அதனால், அவர்கள் இதை கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.
நாம் பல்வேறு அரசை பார்த்திருக்கிறோம். ஆனால், வில்லனை போல் நாட்டில் உள்ள அனைவரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு பிரதமரை இதுவரை பார்த்ததில்லை.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 2 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர், 12,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மோடிக்கு தகவல்களை எப்படி திரித்து சொல்ல வேண்டும் என்பது மட்டுமே தெரியும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


