ஆஸ்திரேலியாவில் இருக்கும் தங்களது தாயைப் பார்க்க இரண்டு சகோதரர்களுக்கு 5 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு பாஸ்போர்ட் மண்டல அலுவலர் கடந்த சனிக்கிழமை மாலை, கோரமங்கலா பாஸ்போர்ட் அலுவலகத்தை திறந்து ஆஸ்திரேலியாவில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தங்களது தாயைப் பார்க்க, உடனடியாக சகோதரர்கள் இரண்டு பேருக்கு பாஸ்போர்ட் வழங்கும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
அவர்கள் யார் என்றால், இரண்டு பெரிய வங்கிகளின் உயர் அதிகாரிகள்தான். கனரா வங்கி, தவரேகேரே கிளையின் பொது மேலாளர் ஜி.வி. ரகுசேஷு மற்றும் விஜயா வங்கியின் பொது மேலாளர் ஜி.வி. ராம மோகன் ஆகியோர்தான் அவர்கள்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் இருக்கும் எங்களது உறவினர்களிடம் இருந்து சனிக்கிழமை போன் வந்தது. அதில் பேசிய உறவினர்கள், ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பார்க்கச் சென்ற எங்களது தாயார், அங்கு நிகழ்ந்த மிக மோசமான தீ விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக ஆஸ்திரேலியா வருமாறும் கூறியதாகத் தெரிவித்தனர்.
தாயைப் பார்க்க வேண்டிய நிலையில், அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லை. இதுகுறித்து தகவல் அறிந்த பாஸ்போர்ட் மண்டல அலுவலர் பாரத் குமார் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு உடனடியாக செயலில் இறங்கினார். ஊழியர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அலுவலகத்தை திறக்குமாறு உத்தரவிட்டு, உடனடியாக சகோதரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்தார். இதன் அடிப்படையில் இருவருக்கும் இரவு 9.45 மணிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
இது குறித்து மண்டல அதிகாரி பாரத் குமார் கூறுகையில், ஒரு குடும்பத்தினர் சிக்கலில் இருக்கும் போது துரித கதியில் செயல்பட்டு அவர்களுக்கு உதவியதில் பெருமிதம் அடைவதாகக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

