ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஒடிஸாவிலும் விற்பனைக்கு வந்தது துருக்கி வெங்காயம்

ஒடிஸாவிலும் காய்கறிகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது துருக்கி வெங்காயம்.

News image
Updated On :24 டிசம்பர் 2019, 7:24 am

புவனேஸ்வர்: ஒடிஸாவிலும் காய்கறிகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது துருக்கி வெங்காயம்.

முதல் முறையாக ஒடிஸாவுக்கு துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், சந்தைகளுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒடிஸா மக்களும் துருக்கி வெங்காயத்தை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து காய்கறிகள் மற்றும் வெங்காயம் வரத் தொடங்கியிருப்பதும், உலக நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்திருப்பதன் மூலமும் மெல்ல வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. தற்போது ஒடிஸாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30க்கு விற்பனையாகிறது.

அதே சமயம், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து உருளைக்கிழங்கு வரத்து குறைந்திருப்பதால், அதன் விலை அதிகரித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உருளைக்கிழங்கு வணிகர்கள், தங்களது கிடங்கில் இருந்து அனைத்து உருளைக்கிழங்குகளையும் விற்பனைக்கு அனுப்பிவிட்டு, ஜனவரி மாதம் 2ம் வாரத்தில் புதிதாக விளையும் உருளைக் கிழங்குகளை பத்திரப்படுத்தத் தேவையான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உருளைக் கிழங்கு விளைச்சலின் ஒரு பருவக்காலம் முடிந்து, அடுத்த பருவக் காலத்துக்காகக் காத்திருக்கும் நேரம் இது. எனவே, புதிய பருவக்காலத்தில் விளைந்த உருளைக் கிழங்கு வரும் வரை அதன் விலை உயர்ந்தே இருக்கும் என்கிறார்கள் வியாபாரிகள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.