பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கணவருடன் சண்டை; மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணி பெண்!

டெல்லியில் கணவருடன் ஏற்பட்ட விரோதம் காரணமாக, கர்ப்பிணிப் பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :30 ஆகஸ்ட் 2019, 8:28 am

டெல்லியில் கணவருடன் ஏற்பட்ட விரோதம் காரணமாக, கர்ப்பிணிப் பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் ரோஹிணி செக்டார் -2 என்ற பகுதியைச் சேர்ந்த சங்கீதா(23) என்பவர் ஐந்து மாத கர்ப்பிணி. இவரது கணவர் கோவிந்த், அங்குள்ள தனியார் நிறுவன ஊழியர். இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. 

திருமணத்தின் போது, பெண்ணின் வீட்டார் வரதட்சணையாக பேசிய தொகையை கொடுக்கவில்லை என்பதால், கோவிந்த் அடிக்கடி மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். கர்ப்பிணி என்றும் பாராமல் நேற்று அவரிடம், கணவர் கோவிந்த் சண்டையிட்டுள்ளார். இதனால், மனமுடைந்த சங்கீதா, அவர் வசிக்கும் கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி கூறும்போது, 'தற்கொலை செய்துகொண்ட சங்கீதா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்னதாக, அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது கணவர் கோவிந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறோம்' என்று தெரிவித்தார். 

கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.