லக்னௌ: யோகி ஆதித்யநாத் ஆட்சிக்காலத்திலேயே எப்படியாவது ராமர் கோவில் கட்டப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர் துறையின் தலைவராகவும், இணை அமைச்சராகவும் இருப்பவர் சுனில் பராலா. அயோத்யா விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தினசரி விசாரணை நடந்து வரும் வேளையில், இதுதொடர்பாக அவர் பேசியிருப்பதாவது:
முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் எப்படியாவது ராமர் கோவில் கட்டப்படும்:
யோகி ஆதித்யநாத் ஒரு மன்னர் போன்றவர்; ராமர் கோவில் கட்டுவதற்குத் தேவையான பெரும் ஆற்றல் அவரிடம் உள்ளது.
நமது மாநிலத்திற்கு யோகி செய்துள்ள விஷயங்கள் கற்பனை கூட செய்து பார்க்க இயலாதவை.
ஹரித்வார் புனித யாத்திரை செய்பவர்கள் தங்கள் பயணத்தின் போது டி.ஜே மூலம் பாடல்களை இசைக்கத் தற்போது தடை கிடையாது. இந்தப் பயணத்தினை முன்னர் எதிர்த்த அதிகாரிகள் கூட தற்போது ஹரித்வார் யாத்திரிகர்களைப் பூக்களைத் தூவி வரவேற்கின்றனர்.
விரைவில் அயோத்யா பயணம் மேற்கொள்பவர்களையும் பூக்களைத் தூவி வரவேற்கும் முறை கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


