புது தில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத்தலைவர்களில் ஒருவர் வாஜ்பாய். பாஜகவின் மூல அமைப்பான பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவர்களுள் ஒருவராகவும், அக்கட்சி சார்பாக முதன்முறையாக பிரதமரானவருமான அவர் உடல்நலக்குறைவால் கடந்த 16.08.2018 அன்று மரணமடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறானது "தி அன்டோல்ட் வாஜ்பாய்" என்னும் பெயரில் என்.பி. உல்லேக் என்பவரால் புத்தகமாக எழுதப்பட்டு வெளியானது
இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
ஷிவ ஷர்மா மற்றும் சீஷன் அஹமது ஆகியோருக்குச் சொந்தமான 'அமாஸ் பிலிம்ஸ்' என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமானது "தி அன்டோல்ட் வாஜ்பாய்" புத்தகத்தை திரைப்படமாக உருவாக்குவதற்கான உரிமையைப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மா, 'இத்தகைய அதிகம் பேசப்படாத கதாநாயகன் ஒருவரது வாழ்வை திரையில் கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெரிய கவுரமாகவும் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
படத்திற்கான திரைக்தை உருவாக்கப் பணிகள் தொடங்கி விட்டதாகவும், பணிகள் நிறைவடைந்தவுடன் இயக்குநர் மற்றும் நடிக நடிகையர் தேர்வு நடைபெறும் என்றும், படத்திற்கு அநேகமாக "தி அன்டோல்ட் வாஜ்பாய்" என்பதே பேராக இருக்கும் என்றும் அஹமது தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


