புது தில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா மறுத்துவிட்டார்.
இதனால், சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ப. சிதம்பரம் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் மேல்முறையீடு செய்தார்.
இன்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா முன்னிலையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, நேற்றிரவு கூட ப. சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறையும், சிபிஐ அதிகாரிகளும் முயற்சி செய்தனர் என்று கபில் சிபல் வாதத்தை முன் வைத்தார்.
வாதத்தைக் கேட்ட நீதிபதி ரமணா, ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்று அறிவித்தார்.
ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்விடம் தாக்கல் செய்யுமாறு நீதிபதி ரமணா உத்தரவிட்டார்.
ப. சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறையும், சிபிஐ அதிகாரிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவருக்கு முன் ஜாமீன் கிடைப்பதில் மேலும் சிக்கல் நீடித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கண்டனம்

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


