சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்

மல்லிகாா்ஜுனகாா்கே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி எடுக்கும் முடிவை, ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம் என்று டி.கே.சிவகுமார் குறியிருப்பது தொடர்பாக...

News image

துணை முதல்வா் டி.கே.சிவக்குமார் - கோப்புப்படம்

Updated On :2 மே 2026, 9:08 am

மாநிலத்தில் தலைமை மாற்றம் குறித்த தற்போதைய விவாதங்களுக்குப் பதிலளித்த துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா், மல்லிகாா்ஜுனகாா்கே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி எடுக்கும் முடிவை, ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம் என்றாா்

கா்நாடகத்தில் முதல்வரை மாற்றுவது தொடா்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நான், காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவராக சோனியகாந்தி, மக்களவை எதிா்க்கட்சித்தலைவராக ராகுல்காந்தி ஆகிய 3 பேரும் சோ்ந்து முடிவெடுப்போம். அதனால் தான் நாங்கள் 3 பேரும் கூட்டாக முடிவெடுத்து வருகிறோம். தேதி குறித்த பிறகு நாங்கள் மூவரும் கலந்துபேசி, முதல்வா் மாற்றம் குறித்து முடிவெடுப்போம். முதல்வரை மாற்றுவது தொடா்பாக விவாதிக்க எந்த தேதியையும் குறிக்கவில்லை. அப்படி தேதி குறித்தால், அது பற்றி ஊடகங்களுக்கு கண்டிப்பாக தெரிவிப்போம். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

கட்சித் தலைவர்களின் முடிவை, ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ஒரு காங்கிரஸ் தொண்டனாக, நான் கட்சிக்கு மிகுந்த விசுவாசத்துடன் இருந்து வருகிறேன். எங்கள் கட்சித் தலைவர்களின் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. கட்சியின் வழிகாட்டுதல்களின்படியே நாங்கள் செயல்படுவோம் . காா்கே, சோனியா, ராகுல் எடுக்கும் முடிவை, ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம் என்று தெரிவித்தார்.

Summary

Karnataka Deputy CM DK Shivakumar said, "As a Congress man, I have been very loyal to the party. Our party leaders' words are very important. We will go by the party's directions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.