லக்னௌ: உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் திங்களன்று மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது இவரது அமைச்சரவையில் 43 அமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர். இவர்களில் 21 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாகவும் மற்றும் 13 பேர் இணை அமைச்சர்களாகவும் பணியாற்றுகின்றனர். 17 துறைகள் காலியாக உள்ளன
இந்நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் திங்களன்று மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திங்கள் மாலை நடைபெற உள்ள விழாவில் புதிதாக ஆறு அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும், அவர்களில் மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அமைச்சரவையில் இடம்பிடிப்பார்கள் என்றும் தெரிகிறது.
இதுதொடர்பாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில பாஜக தலைவர் ஸ்வதிந்திர சிங் தேவ் ஆகிய இருவரும், வெள்ளியன்று பாஜக தேசிய செயல் தலைவர் நட்டாவை சந்தித்துப் பேசினார்கள். அதேபோல் சனிக்கிழமை மாலை மாநில ஆளுநர் ஆனநதிபென் படேலை முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


