ஜாகுவார் கார் கேட்ட பையனுக்கு பிஎம்டபிள்யு கார் வாங்கிக் கொடுத்த பெற்றோரால் கோபம் அடைந்த பிள்ளை செய்த காரியம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
ஹரியாணா மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்த பெற்றோர் தனது பிள்ளைக்கு பிஎம்டபிள்யு காரை பரிசாக அளித்தனர்.
ஆனால், தான் ஜாகுவார் காரை விரும்பிக் கேட்டும், பெற்றோர் பிஎம்டபிள்யு காரை வாங்கிக் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த பிள்ளையோ, ஓடும் ஆற்றில் புத்தம் புதிய பிஎம்டபிள்யு காரை தள்ளிவிட்டிருக்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஆற்றங்கரையோரத்தில் பிஎம்டபிள்யு காரை நிறுத்திவிட்டு, அதனை ஒரு இளைஞர் ஆற்றுக்குள் தள்ளும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக உயரமாக வளர்ந்திருந்த புற்களுக்குள் அந்த கார் சிக்கிக் கொண்டது. பிறகு, உள்ளூர் மக்களின் உதவியோடு, சில இளைஞர்கள் அந்தக் காரை வெளியே ஏற்றினர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


