விஜயவாடா: இது தேர்தல் நேரம் என்பதாலோ என்னவோ, ஆந்திர மாநிலத்தில் விளைவிக்கப்பட்ட மோடி தக்காளி விற்பனைக்கு வந்த சிறிது நேரத்தில் விற்றுத் தீர்ந்தது. இதுதான் இன்றைய வைரல் செய்தியும் புகைப்படமும்.
இதய வடிவில், மோடியைக் குறிக்கும் வகையில் எம் என்ற ஆங்கில எழுத்து ஒருபக்கத்திலும், இந்திய வரைபடம் மற்றொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கும் வகையில் இந்த தக்காளி விளைவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்து, ஆந்திரா திரும்பி விவசாயம் செய்து வரும் ஜனார்தன் சௌதாரி ஜம்பாலாவும், ரச்சார்சா சிவகுமார் ரெட்டியும் இணைந்து இந்த சாகசத்தில் ஈடுபட்டனர்.
சித்தூர் மாவட்டம் மண்டனபள்ளே பகுதியில் விளைவிக்கப்பட்ட இந்த இதய வடிவிலான தக்காளி ஆந்திராவுக்கு வந்த உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பரிசாக வழங்கப்பட்டது.
வாராணசியில் மோடி பிரசாரம் செய்த போது அங்கே இந்த இதய வடிவிலான மோடி தக்காளி சந்தைக்கு வந்த நொடியில் விற்றுத் தீர்ந்தது.
இது நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கப்பட்ட மோல்டட் தக்காளி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


