4-ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 210 வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளதாக நேஷனல் எலக்ஷ்ன் வாட்ச் மற்றும் அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ் (ஏடிஆர்) இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
17-வது மக்களவைத் தேர்தலின் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ஆம் தேதி 8 மாநிலங்களில் 71 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 943 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 943 வேட்பாளர்களில் 928 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஏடிஆர் ஆய்வு செய்தது. இந்த ஆய்வை மேற்கொள்ளும் சமயத்தில் மீதமுள்ள 15 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரம் முழுமையாக கிடைக்காத காரணத்தில் அவை தவிர்க்கப்பட்டுள்ளதாக ஏடிஆர் தெரிவித்தது.
இந்த ஆய்வின் படி, 928 வேட்பாளர்களில் 210 வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது. அதில் 158 பேர் மீதான குற்றவியல் வழக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்கில் 12 வேட்பாளர்கள் உள்ளனர்.
கட்சிகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் மீதுள்ள குற்றவியல் வழக்குகள் விவரம்:
பாஜகவைச் சேர்ந்த 57 வேட்பாளர்களில் 25 வேட்பாளர்கள், காங்கிரஸின் 57 வேட்பாளர்களில் 18 வேட்பாளர்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் 54 வேட்பாளர்களில் 11 வேட்பாளர்கள், 21 சிவசேனா வேட்பாளர்களில் 12 வேட்பாளர்கள், 345 சுயேச்சை வேட்பாளர்களில் 60 வேட்பாளர்கள் ஆகியோர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது.
கட்சிகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் மீதுள்ள முக்கியத்துவம் வாய்ந்த குற்றவியல் வழக்குகள் விவரம்:
பாஜகவின் 57 வேட்பாளர்களில் 20 வேட்பாளர்கள், காங்கிரஸின் 57 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் 54 வேட்பாளர்களில் 10 வேட்பாளர்கள், சிவசேனாவின் 21 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள், 345 சுயேச்சை வேட்பாளர்களில் 45 வேட்பாளர்கள் ஆகியோர் மீது முக்கியத்துவம் வாய்ந்த குற்றவியல் வழக்குகள் உள்ளது.
இதில் 3 வேட்பாளர்கள் மீது கொலை வழக்கு, 24 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு, 4 வேட்பாளர்கள் மீது ஆள்கடத்தல் வழக்கு, 21 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றவியல் வழக்கு, 16 வேட்பாளர்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு வழக்கு ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


