பெண்களுக்கு அதிகாரமளிக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் காலம் காலமாக குரல் எழுப்பி வருகின்றன. 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலும் கூட பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக அறிவித்துள்ளது.
ஆனால், செயல் அளவில் பார்த்தால் இதில் எந்தவித முன்னேற்றமும் அடையவில்லை.
1952-இல் முதல் மக்களவை அமைந்த போது, மொத்தம் 24 பெண்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர். அதன்பிறகு, 67 ஆண்டுகள் ஆகியும் மக்களவை பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரிதளவு மாற்றம் நிகழவில்லை. 16-ஆவது மக்களவையில் மொத்தம் 66 பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். 67 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 24-இல் இருந்து 66-ஐ தான் தொட்டுள்ளது.
| மக்களவை | பெண் உறுப்பினர்கள் எண்ணிக்கை | |
| 1. | முதல் மக்களவை | 24 |
| 2. | 2-ஆவது மக்களவை | 24 |
| 3. | 3-ஆவது மக்களவை | 37 |
| 4. | 4-ஆவது மக்களவை | 33 |
| 5. | 5-ஆவது மக்களவை | 28 |
| 6. | 6-ஆவது மக்களவை | 21 |
| 7. | 7-ஆவது மக்களவை | 32 |
| 8. | 8-ஆவது மக்களவை | 45 |
| 9. | 9-ஆவது மக்களவை | 28 |
| 10. | 10-ஆவது மக்களவை | 42 |
| 11. | 11-ஆவது மக்களவை | 41 |
| 12. | 12-ஆவது மக்களவை | 44 |
| 13. | 13-ஆவது மக்களவை | 52 |
| 14. | 14-ஆவது மக்களவை | 52 |
| 15. | 15-ஆவது மக்களவை | 64 |
| 16. | 16-ஆவது மக்களவை | 66 |
2009-இல் காங்கிரஸ் கட்சியின் மீரா குமார் மக்களவையின் முதல் பெண் சபாநாயகராக பொறுப்பேற்றார். அவர் 2014 வரை சபாநாயகராக அந்த பொறுப்பை வகித்தார். இதைத்தொடர்ந்து, 2014-இல் பாஜகவின் சுமித்ரா மகாஜன் 2-ஆவது பெண் சபாநாயகராக பொறுப்பேற்றார்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. ஆனால், அதை எந்த கட்சியும் செயல்படுத்தவில்லை.
காங்கிரஸ் கட்சி 2009, 2014 ஆகிய ஆண்டுகளின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்ற வாக்குறுதியை அளித்திருந்தது. தற்போதைய தேர்தல் அறிக்கையிலும் அது இடம்பெற்றுள்ளது.
பாஜக 2014 ஆண்டில் தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அது 2019-ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1999, 2009 ஆகிய ஆண்டுகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதேபோல், தற்போது 2019 தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


