லத்தூர்: நீங்கள் பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் நேரடியாக எனக்கு வந்து சேருவதாகும் என்று முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்திலுள்ள அவுசா என்னும் இடத்தில் செவ்வாயன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கவுள்ளவர்களுக்கு சில வேண்டுகோள்களை முன்வைத்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
21-ஆம் நூற்றாண்டில் பிறந்து தற்போது இளம் பருவத்தை எட்டியுள்ள இந்த தலைமுறையினைச் சேர்ந்தவர்கள் தங்களது குடும்பம், சுற்றியுள்ள மக்கள் மற்றும் இந்த தேசத்திலிருந்து நிறைய பெற்றுள்ளனர்.
எனவே அவற்றை திருப்பி அளிப்பதற்கு இதுவே சரியான தருணம். உங்களது முதல் ஓட்டானது புல்வாமாவில் உயிர் நீத்த வீரர்களுக்காக, ஏழை மக்கள் வீடு பெறுவதற்காக, விவசாயிகளுக்கு நீர் கிடைப்பதற்காக மற்றும் நமது நாட்டு மக்கள் அனைவரும் மருத்துவ வசதிகளை பெறுவதற்காக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் அனைவரும் நமது நாட்டிற்காகவும் வலிமையான அரசுக்காகவும் வாக்களிக்க வேண்டும்,
நீங்கள் பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் நேரடியாக எனக்கு வந்து சேருவதாகும்.
எனவே தேச நலுனுக்காக வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


