புது தில்லி: விரைவில் மக்களைவைத் தேர்தல் நடைபெறவுள்ள தருணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தொடர் வருமான வரி சோதனைகள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துடன் வருவாய்த்துறை செயலர் மற்றும் உயர் அதிகாரிகள் செவ்வாயன்று சந்தித்து விளக்கமளித்தனர்.
வருவாய்த் துறையின் நிர்வாகப் பிரிவாக இயங்கும் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மற்றும் வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் ஆகியவை நிதி தொடர்பான குற்ற நடவடிக்கைகளில் விசாரணை மேற்கொள்கின்றன.
நாடெங்கும் ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலின் முதல் கட்டம் விரைவில் துவங்கவுள்ள நிலையில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சில நாட்களுக்கு முன்பும், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் சனிக்கிழமையன்றும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது. இதனையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் மத்திய வருவாய் செயலாளருக்கு திங்களன்று தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகள் பாரபட்சமின்றி நடுநிலையாகச் செயல்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக கருப்புப் பணம் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழும் பட்சத்திலும், சோதனைகள் திட்டமிடப்படும் போதும் அதுதொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்துடன் வருவாய்த்துறை செயலர் மற்றும் மத்திய நேரடி வரிகள் விதிப்பு ஆணையத் தலைவர் இருவரும் செவ்வாயன்று நேரடியாக சந்தித்து விளக்கமளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


