லக்னௌ: உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக பிரபல நடிகரின் மனைவி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஓருவராவார். நாடாளுமன்றத் தேர்தலில் இவர் உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக பிரபல நடிகரின் மனைவி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜகவில் இருந்து எம்.பியாகத் தேர்ந்துடுக்கப்பட்டவரும் தற்போது அக்கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியுள்ளவருமான நடிகர் சத்ருகன் சின்ஹா, சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அத்துடன் அவர் வரும் 6-ஆம் தேதியன்று காங்கிரசில் அதிகாரப்பூர்வமாக அவர் இணைய உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது அவரது மனைவியான பூனம் சின்ஹா உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக போட்டியிட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமாஜ்வாதிக் கட்சியின் சார்பாக அவர் போட்டியிட உள்ளார் என்றும், பகுஜன் சமாஜ் கட்சியும் பூனம் சின்ஹாவுக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது.
ஏற்கனவே உ.பியில் சோனியா மற்றும் ராகுலுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி அறிவித்துள்ளது. அதேபோல இந்த கூட்டணிக்கு எதிராக 7 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று காங்கிரசும் அறிவித்துள்ளது.
அந்த 7 தொகுதிகளில் ராஜ்நாத்தின் லக்னௌவும் ஒன்று என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல முன்னரே நடைபெற்றுள்ள பேச்சுவார்தையின் படி பிகாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் சத்ருகன் சின்ஹா போட்டியிடுவார் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


