ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கேரள வெள்ளத்துக்கு மாநில அரசே காரணம்: அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை

2018-இல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மாநில அரசின் மோசமான அணை பராமரிப்பே காரணம் என்று கேரள உயர்நீதிமன்றம் நியமித்த சட்ட வல்லுநர் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

News image
Updated On :3 ஏப்ரல் 2019, 2:26 pm


2018-இல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மாநில அரசின் மோசமான அணை பராமரிப்பே காரணம் என்று கேரள உயர்நீதிமன்றம் நியமித்த சட்ட வல்லுநர் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

2018-இல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 470 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த வெள்ளம் குறித்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய கேரள உயர்நீதிமன்றம் சட்ட வல்லுநரை நியமித்தது. அவர் 47 பக்க ஆய்வறிக்கையை இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்தார்.

அதில், அணை திறப்பின் போது எந்தவித நடைமுறையும் பின்பற்றவில்லை என்று கூறப்பட்டுள்ளது. கேரள அரசு, கேரள மின்சார வாரியம் தாக்கல் செய்த அறிக்கைகள் அணை பராமரிப்பு குறித்து எந்த தகவலையும் குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பிறகும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. குறிப்பாக மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றவில்லை. கேரளாவில் உள்ள 70 அணைகளும் வெள்ளம் தடுப்பு நோக்கத்துக்காக பயன்படுத்தப்படவில்லை. அதிக அளவு நீர்த்தேக்கம் மற்றும் அதை திடீரென வெளியேற்றியதே இந்த மோசமான வெள்ளத்துக்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கூடுதல் விசாரணைக்கு முன்னாள் நீதிபதி தலைமையில் சுயாதீன வல்லுநர் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையில், நீர் வல்லுநர்கள், பொறியாளர்கள், மற்றும் அணை பராமரிப்பு வல்லுநர்கள் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.