ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இம்ரான்கான் பதவியேற்ற பிறகே பாகிஸ்தான் தீவிரத் தாக்குதல் தொடுக்கிறது: பிஎஸ்எஃப் தலைவர்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகுதான், அந்நாட்டு ராணுவம் இந்தியா மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருவதாக எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் கே.கே. ஷர்மா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 செப்டம்பர் 2018, 9:35 am


புது தில்லி: பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகுதான், அந்நாட்டு ராணுவம் இந்தியா மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருவதாக எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் கே.கே. ஷர்மா தெரிவித்துள்ளார்.

சர்வதேச எல்லையில் செப்டம்பர் 18ம் தேதி பிஎஸ்எஃப் தலைமைக் காவலர் நரேந்திர சிங் கொலை செய்யப்பட்டதும், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகே என்று ஷர்மா கூறியுள்ளார்.

இந்த கொலை, எல்லையில் செயல்படும் குழுவால் செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

எல்லையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் இதற்கு முன்பு நாம் சந்திக்காத ஒரு விஷயம் அதாவது எல்லையில் செயல்படும் குழுவால் நமது எல்லைக்குள் நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் நடந்தேறியுள்ளது. எல்லையில் மட்டுமே இதுபோன்ற சம்பவம் நடக்கும். கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது எதிர்த்தரப்பினர் மிகவும் வீரியத்துடன் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று பிஎஸ்எஃப் தலைவர் கூறினார்.

புற்களை நீக்கச் செல்லும் நடவடிக்கையின் போதே பிஎஸ்எஃப் வீரர் கொலை செய்யப்பட்டார். வழக்கமாக இந்த நடைமுறையின் போது எதிர்தரப்பில் வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள். நாங்கள் அங்கிருந்து திரும்பி வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகே எங்கள் பணியை தொடருவோம். இந்த முறை அப்படி திரும்பி வரும்போதுதான் ஒருவர் திரும்பவில்லை என்று தெரிந்து அப்பகுதிக்குச் சென்று தேடினோம். அங்கு ஒரு நபரை இழுத்துச் சென்றிருப்பதற்கான தடயங்கள் கிடைத்தன.

அந்தப் பகுதி சர்வதேச எல்லை என்பதால் எங்களால் அங்கு உடனடியாக சென்று தேட முடியவில்லை. எதிர்த்தரப்பினருடன் பேசி தேட அனுமதி பெற்று அங்குச் சென்று தேடிய போது, பிஎஸ்எஃப் வீரரின் உடல் கிடைத்தது. அவரது கால்கள் கட்டப்பட்டிருந்தன. உடலில் 3 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன. அவரது கழுத்தை அறுத்ததற்கான அடையாளங்களும் இருந்தது.  அந்த பகுதியே காலியாக இருந்தது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு எதிர்தரப்பினர்  அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். கிராமம் முழுவதும் காலியாகிவிட்டது. எப்போதுமே பிஎஸ்எஃப்  தக்க பதிலடி கொடுக்கும். ஆனால் தற்போது உடலை கைப்பற்றுவதே முக்கியம் என்பதால் அதில் கவனம் செலுத்தினோம். இந்த நடவடிக்கை குறித்து ஆராய்ந்து முடிவெடுப்போம் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானின் கொள்கையே, இந்தியாவுக்குள் பயங்கரவாதத்தை ஊடுருவ வைப்பதுதான் என்பது எங்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.