மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கோவா அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கம்: புதியவர்கள் இன்று மாலை பதவியேற்பு

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :24 செப்டம்பர் 2018, 7:10 am


பனாஜி: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜகவைச் சேர்ந்த பிரான்ஸிஸ் டிசௌஸா, பாண்டுரங் மட்கைகர் ஆகியோரை கோவா அமைச்சரவையில் இருந்து நீக்க பாஜக முடிவு செய்து அறிவித்துள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த டிசௌஸா, உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் மட்கைகர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கி, இவர்களுக்குப் பதிலாக பாஜகவைச் சேர்ந்த நிலேஷ் கப்ரால், மிலிந்த் நாயக் ஆகியோர் இன்று மாலை புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.