ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்ஸல்கள் இன்று நடத்திய திடீர் தாக்குதலில் 2 போலீஸ்காரர்கள் மற்றும் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் ஒருவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
அந்த 18 தொகுதிகளும், நக்ஸலைட் தீவிரவாதிகள் ஆதிக்கம் கொண்ட பஸ்தார், காங்கர், சுக்மா, பிஜாப்பூர், நாராயண்பூர், ராஜ்நந்த்கோன் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அமைந்துள்ளன.
இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக தூர்தர்ஷன் குழுவினர் தண்டேவாடா மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். இன்று ஆரன்பூர் காட்டுப்பகுதி வழியாக அவர்கள் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக போலீஸாரும் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்ஸலைட் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 2 போலீஸ்காரர்கள் மற்றும் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் ஒருவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தில்லியைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் ருத்திர பிரதாப், காவலர் மங்கலு மற்றும் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தண்டேவாடா பகுதிக்கு கூடுதல் போலீஸார் விரைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கென்னை நேரில் அழைத்துப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பதற்றம் வேண்டாம்: என்டிஏ

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


