மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

முன்னாள் ராணுவ வீரர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்திப்பு

இந்திய நாட்டுக்காக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :27 அக்டோபர் 2018, 9:54 am


புது தில்லி: இந்திய நாட்டுக்காக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வந்தால், ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து குற்றம்சாட்டிய ராகுல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் என்ற பெயரில் ரூ.30 ஆயிரம் கோடியைத் தூக்கிக் கொடுத்துள்ளது. ஆனால், ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை மட்டும் ஏற்க மறுக்கிறது என்று சாடினார்.

30 நிமிட நேர சந்திப்பின் போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களிடம் பேசிய ராகுல், அனில் அம்பானிக்குக் கொடுத்த ரூ.30 ஆயிரம் கோடியிருந்தால், ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.