ராய்பூர்: சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 4 சி.ஆர்.பி.எப். வீரர்கள் இன்று கொல்லப்பட்டனர்.
சத்தீஷ்காரில் பிஜப்பூர் மாவட்டத்தில் முர்டாண்டா முகாமில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் அந்த பகுதியை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் பணிக்காக சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது முகாமில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்பு வாகனத்தில் சென்று கொண்டிருந்த வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் சக்தி வாய்ந்த நில கண்ணிவெடி கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், 4 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனிடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா

சூடம்மாள் அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி

ஹீட் ஸ்ட்ரோக் - அறிகுறிகள் என்ன? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


