புது தில்லி: இந்தியாவில் ஊழல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக 'ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷ்னல் இந்தியா' என்னும் சர்வதேச நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷ்னல் இந்தியா' என்னும் சர்வதேச நிறுவனமானது, பிரபல இணைய குழுமமான 'லோக்கல் சர்க்கிள்ஸ்' உடன் இணைந்து இந்தியாவில் அதிகரித்து வரும் ஊழல் குறித்து விரிவான ஆய்வு நடத்தியது. அந்நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:
இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 56 சதவீதம் பேர் தங்கள் கடந்த ஓராண்டில் தங்கள் வேலைகளை நிறைவேற்றுவதற்காக லஞ்சம் கொடுத்திருப்பதாக ஒப்புக்கொண்டனர். கடந்த ஆண்டு இதே கேள்விக்கு 45 சதவீதம் மட்டுமே ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் ஊழல் எதிர்ப்பு தொடர்பான உதவிகளுக்காக தனியான தொலைபேசி எண் இருக்கிறதா என்ற கேள்விக்கு, 91% பேர் அப்படி ஒரு தொலைபேசி எண் இல்லை என்றோ அல்லது அப்படி இருப்பது குறித்து தங்களுக்குத் தெரியது என்றோ தெரிவித்துள்ளனர். இது ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பல்வேறு மாநில அரசுகளுக்கு இருக்கும் அக்கறையின்மையை காட்டுவதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.
அதேபோல லஞ்சம் வழங்குவதில் இன்னும் நேரடியாக பணம் வழங்குவதுதான் முதன்மையான வழியாக இருக்கிறது. 39% பேர் அப்படித்தான் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர். 25% பேர் முகவர்கள் வழியாகவும், 1% இதர வழிகளில் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 48% பேர் ஊழலை ஒழிக்க தங்களது மாநிலம் எதுவும் செய்வது இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதுபோல் 41% ஊழலுக்கு எதிரான திருத்தப்பட்ட புதிய சட்டமானது அவ்வளவு வலுவானது இல்லை என்று தெரிவித்துள்ளனர். 63% பேர் இந்த சட்டத்தின் மூலம் அப்பாவிகள் மற்றும் நேர்மையான அதிகாரிகள் பாதிக்கப்படுவது அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்
இறுதியாக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது வழக்குத் தொடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்ற விதிமுறையானது, ஊழலை அதிகரிக்கச் செய்வதாக 49% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


