மங்களூருவில் கனமழை: சாலைகளில் வெள்ளம் - (படங்கள் மற்றும் விடியோ)
மங்களூருவில் செவ்வாய்கிழமை பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.


மங்களூருவில் செவ்வாய்கிழமை பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் செவ்வாய்கிழமை கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மங்களூருவில் அமைந்துள்ள பாணம்பூர் எனுமிடத்தில் மிக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், அப்பகுதி பாஜக எம்பி நளின் குமார் காடீல் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.




தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...