ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வெற்றி பெற்ற பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே விடுக்கும் கடும் சவால்

கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதிக தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்குமா என்பதில் இன்னமும் இழபறி நீடிக்கிறது.

News image
Updated On :15 மே 2018, 10:21 am


கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதிக தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்குமா என்பதில் இன்னமும் இழபறி நீடிக்கிறது.

இந்த நிலையில், சிவ சேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பாஜக பெற்றிருக்கும் வெற்றியை கடுமையாக விமரிசித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பாஜக பெற்றிருக்கும் இந்த வெற்றியானது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் பெற்ற வெற்றியே. உங்களை நீங்கள் நம்பினால், வாக்குச் சீட்டுகளை வைத்து தேர்தல் நடத்தி வெற்றிபெற்றுக் காண்பியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.

இடைத் தேர்தல்களில் தோல்வி அடைந்த பாஜக, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதையும் உத்தவ் தாக்கரே சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் வரும் போகும், இன்று நீங்கள் வெற்றி பெற்றால், நாளை நீங்கள் தோல்வி அடையலாம், ஆனால், தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.