புதுதில்லி: சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் தில்லி காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், அவரது கணவரான சசி தரூர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி17-ஆம் தேதி தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மர்மான முறையில் உயிரிழந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தன. இதுதொடர்பாக தில்லி காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வந்தது..
இந்நிலையில் திங்களன்று தில்லி காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், அவரது கணவரான சசி தரூர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தில்லி மெட்ரோபாலிட்டன் நீதிபதி தர்மேந்தர் சிங் முன்னிலையில் தாக்கல் செயய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில், இந்திய குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவுகள் 498A (பெண்ணை அவரது கணவரோ அல்லது உறவினர்களோ கொடுமை செய்தல்) மற்றும் 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுனந்தா புஷ்கரின் கணவரான சசி தரூர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


