கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

வாக்காளர்கள் கை, கால்களை கட்டி பாஜக-வுக்கு வாக்களிக்க கொண்டு வாருங்கள்: எடியூரப்பா 

வாக்காளர்களின் கை மற்றும் கால்களை கட்டி பாஜக-வுக்கு வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு கொண்டு வருமாறு கர்நாடக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா சனிக்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:58 pm

Raghavendran

வாக்காளர்களின் கை மற்றும் கால்களை கட்டி பாஜக-வுக்கு வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு கொண்டு வருமாறு கர்நாடக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா சனிக்கிழமை தெரிவித்தார்.

225 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பெலகாவியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கிட்டூர் தொகுதி வேட்பாளர் மஹந்தேஷ் தொட்டகௌடருக்கு ஆதரவாக பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா சனிக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

சாமுண்டி மற்றும் பதாமி ஆகிய இரு தொகுதிகளிலும் சித்தராமையா தோல்வியடைவார். காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல். எனவே தான் பாஜக-வுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். இது நீங்கள் ஓய்வெடுக்கும் நேரமில்லை. உங்கள் தொகுதியில் வாக்காளர்கள் யாரும் வாக்களிக்காமல் இருந்தால், அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடைய கை மற்றும் கால்களைக் கட்டி பாஜக-வுக்கு வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு கொண்டு வாருங்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.