கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஆளுநர் மாளிகையில் இருந்த 5 சந்தன மரங்கள் கடத்தல்

மஹாராஷ்டிர மாநில ஆளுநர் மாளிகையில் இருந்து 5 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:55 pm

Raghavendran

மஹாராஷ்டிர மாநில ஆளுநராக வித்யாசாகர் ராவ் உள்ளார். அவருக்கான ஆளுநர் மாளிகை (ராஜ் பவன்) புணேவில் அமைந்துள்ளது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் இருந்து 5 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. 

ஏப்ரல் 30-ஆம் தேதி இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் அமைந்துள்ள சதுஷ்ருங்கி காவல்நிலையத்தில் மே 1-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆளுநர் மாளிகையில் ஆளுநர் மட்டுமல்லாமல் குடியரசுத் தலைவர், பிரதமர், நாடாளுமன்ற அவைத் தலைவர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்களும் புணே வரும்போது தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. 

இந்நிலையில், மஹாராஷ்டிர ஆளுநர் மாளிகை அமைந்துள்ள இடத்துக்கு மிக அருகில் தான் அப்பகுதி காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களில் ஆளுநர் மாளிகையில் இருந்து சந்தன மரங்கள் கடத்தப்படுவது இது 2-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.