கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கர்நாடகத்தில் பாஜக, ஜேடிஎஸ் இடையே அறிவிக்கப்படாத கூட்டணி: சித்தராமையா 

மாநிலம் முழுவதும் பல இடங்களில் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் அறிவிக்கப்படாத கூட்டணியை உருவாக்கியுள்ளதாக கர்நாடக முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:54 pm

Raghavendran

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. பின்னர் மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று ஏப்ரல் 17-ந் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த தேர்தலில் போட்டியிட மொத்தம் 2,655 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில், 2 ஆயிரத்து 436 ஆண் வேட்பாளர்களும், 219 பெண் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். 

இதையடுத்து அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக்ததில் பாஜக புயல் வீசுவதாக தெரிவித்தார். 

இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மாநிலம் முழுவதும் பல இடங்களில் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் அறிவிக்கப்படாத கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியை வீழ்த்த அந்த இரு கட்சிகளும் சதித்திட்டம் தீட்டியுள்ளன. இருப்பினும் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. ஏனெனில் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.