புது தில்லி: நாடு முழுவதும் +2 பொருளாதார தேர்வு நடைபெற்ற அன்றைய தினம், தில்லி சிபிஎஸ்இ அலுவலகத்துக்கு கைகளால் எழுதப்பட்ட விடைத்தாள் தபாலில் வந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ் 2 பொருளாதாரம் மற்றும் பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத் தேர்வுக்கான வினாத்தாள்கள், முன்கூட்டியே வெளியானதாகப் புகார்கள் எழுந்த நிலையில், மறு தேர்வு நடத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தில்லி காவல்நிலையத்தில் சிபிஎஸ்இ அளித்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, ராஜிந்தர் நகரில் இயங்கும் பயிற்சி மையத்தை நடத்தும் நபருக்கு, வினாத்தாள்கள் கசிந்ததில் முக்கியப் பங்கு இருப்பதாக, மார்ச் 23ம் தேதி அலுவலகத்துக்கு பெயர் குறிப்பிடாமல் அனுப்பப்பட்ட பேக்ஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பேக்ஸில் ராஜிந்தர் நகர் பகுதியில் இயங்கும் இரண்டு பள்ளிகளுக்கும் வினாத்தாள் கசிந்ததில் தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டிருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், மார்ச் 26ம் தேதி +2 பொருளாதார தேர்வு நடைபெற்ற அன்றைய தினம் ரௌசி அவன்யூவில் சிபிஎஸ்இ மையத்துக்கு, அனுப்புநர் முகவரி இல்லாமல் வந்த பதிவுத் தபாலில், கையால் எழுதப்பட்ட பொருளாதார விடைத்தாள் இணைக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், பொருளாதார வினாத்தாள் வெளியே கசியவிடப்பட்டதும், வாட்ஸ் அப் மூலம் பரவியதும் உறுதி செய்யப்பட்டது என்று சிபிஎஸ்இ அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தான்குளத்தில் விஏஓ-வின் வீடு புகுந்து குழந்தையைக் கடத்த முயற்சி: பெண் கைது

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடு! - தவெக வேட்பாளா் குற்றச்சாட்டு

சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்!

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


