நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

சோனியாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: ஷிம்லாவில் இருந்து உடனடியாக தில்லி திரும்பினார்

மகள் கட்டி வரும் வீட்டை நேரில் பார்வையிட ஷிம்லா வந்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உடடினயாக தில்லி திரும்பினார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:33 pm

PTI


ஷிம்லா: மகள் கட்டி வரும் வீட்டை நேரில் பார்வையிட ஷிம்லா வந்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உடடினயாக தில்லி திரும்பினார்.

சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி வத்ரா, ஷிம்லாவில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் சஹ்ராபராவில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டை நேரில் பார்க்க மகள் பிரியங்காவுடன் சோனியா நேற்று ஷிம்லா சென்றிருந்தார்.

திடீரென நேற்று இரவு சோனியாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னதாகவே சோனியா தனது காரில் புறப்பட்டார். வழியில் ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் சோனியாவை சந்தித்து அவரை பரிசோதித்து முதலுதவி சிகிச்சை அளித்து தில்லிக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.