பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தேவை ஏற்படின் இந்திய படைகள் எல்லைத் தாண்டும்: எச்சரிக்கிறார் ராஜ்நாத்

உலகில் உள்ள எந்த சக்தியாலும் இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது, தேவை ஏற்படின் இந்தியப் படைகள் எல்லைத் தாண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image
Updated On :17 மார்ச் 2018, 12:18 pm


புது தில்லி: உலகில் உள்ள எந்த சக்தியாலும் இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது, தேவை ஏற்படின் இந்தியப் படைகள் எல்லைத் தாண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் முன்பும் சரி, தற்போதும், எதிர்காலத்திலும் இந்தியாவினுடையதுதான். அதனை எங்களிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று ரைஸிங் இந்தியா மாநாட்டில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் கூறினார்.

நாட்டைப் பாதுகாப்பதில் இந்திய ராணுவத்துக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியை பாராட்டிய ராஜ்நாத் சிங், நாட்டுக்குள் மட்டுமல்ல, தேவை ஏற்படின், நாட்டைக் காக்க நாட்டின் எல்லையையும் தாண்டுவோம் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பயங்கரவாதத்துக்கு உதவுவதை நிறுத்தினால், பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது அமெரிக்காவும் பாகிஸ்தானை கண்டிக்க ஆரம்பித்துவிட்டது. பாகிஸ்தானுக்கு தற்போது என்னவானது என்று தெரியவில்லை. அந்நாட்டுடன் நட்பு பாராட்டவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எங்கள் நட்பை ஏற்க பாகிஸ்தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.