பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

தீராத நோயுடையவர்களை விதிகளுக்குட்பட்டு மரணிக்க அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தீராத நோயுடைய, மருத்துவ சிகிச்சையால் காப்பாற்ற இயலாதவர்களை சில விதிகளுக்குட்பட்டு மரணிக்க அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:26 pm

PTI


புது தில்லி: தீராத நோயுடைய, மருத்துவ சிகிச்சையால் காப்பாற்ற இயலாதவர்களை சில விதிகளுக்குட்பட்டு மரணிக்க அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கருணைக் கொலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

அந்த தீர்ப்பில், மருத்துவ சிகிச்சையால் காப்பாற்ற இயலாதவர்களை மரணிக்க அனுமதிக்கலாம் என்றும் மீள முடியாத நோயால் வாடுவோரை கருணைக் கொலை செய்யலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவ சிகிச்சையால் குணம் பெற முடியாத நோயாளியின் மருத்துவ உபகரணங்களை அகற்றி உயிரிழக்க வைக்கலாம். எப்படி ஒரு மனிதன் கண்ணியத்தோடு வாழ உரிமையுண்டோ அதுபோல மனிதர்கள் கண்ணியத்தோடு இறப்பதற்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதிகள், கருணை கொலை செய்வதற்கான வழிமுறைகளையும் வகுத்து உத்தரவிட்டுள்ளனர்.

நலம்பெற வழி இல்லை என்ற நிலையில், செயற்கை உபகரணங்களைக் கைவிட்டு உயிரிழக்க அனுமதிக்கலாம் என்று கருணைக் கொலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.

கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்திருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.