கொல்கத்தா: கொல்கத்தாவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாஜகவின் ஆதார அமைப்பான ஜனசங்க நிறுவனர் ஸ்யாமா பிரசாத் முகர்ஜியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 25 ஆண்டு காலமாக அம்மாநிலத்தை ஆட்சி செய்து வந்த இடதுசாரிகளின் கைவசம் இருந்த ஆட்சியை பாஜக கைப்பற்றியது.
உடனடியாக அந்த மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான லெனின் அவர்களின் இரண்டு சிலைகள் அகற்றப்பட்டன. இது அங்கு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் கொல்கத்தாவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாஜகவின் ஆதார அமைப்பான ஜனசங்க நிறுவனர் ஸ்யாமா பிரசாத் முகர்ஜியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜியின் இல்லத்திற்கு அருகே அமைந்திருக்கக் கூடிய கியோரட்டலா மின்மயானப் பகுதியில், ஜனசங்க நிறுவனர் ஸ்யாமா பிரசாத் முகர்ஜியின் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது.
அந்த சிலையானது புதனன்று காலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சிலையின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிலையின் முகத்தில் கரியும் பூசப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு கிடைத்த போஸ்டர் ஒன்றில் 'அடிப்படைவாதிகள்' என்று எழுதப்பட்டிருந்தது.
இது தொடர்பாக போலீசார் தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


